திருப்பூரில் நாளை (ஜூலை 29) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
திருப்பூரில் நாளை (ஜூலை 28) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூரில் நாளை (ஜூலை 28) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூரில் நாளை (ஜூலை 29) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (ஜூலை 29) திருப்பூர் மாவட்ட ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அவிநாசி தகவல் வெளியிட்டுள்ளார்.

மின்தடை :

சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின் தட்டுப்பாடு தான் காரணம் என்றும் அதனை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது.

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

அவ்விதமாக நாளை (ஜூலை 29) அன்று திருப்பூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் அங்கு சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. சீரான மின் விநியோகம் நடக்க ஏதுவாக பராமரிப்பு பணியின் போது மின்மாற்றிகளில் பழுது, மின்கம்பங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

எனவே நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகா், பெரியபாளையம், கே.ஆா்.ஆா்சி.அமிா்தவா்ஷினி நகா், கே.கே.ஆா்.ஆா்சி.பிருந்தாவன் நகா், பழைய ஊஞ்சம்பாளையம், புது ஊஞ்சம்பாளையம், பொங்குபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துத்ப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அவிநாசி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!