திருநெல்வேலியில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
திருநெல்வேலியில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலியில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலியில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் நடைபெற்று வரும் மின்வாரிய பராமரிப்பு பணிகள் உவரி, இட்டமொழி பகுதியில் 23ம் தேதி(நாளை) நடைபெற உள்ளது. இதனால் சில மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு மின்தடை ஏற்படும் என வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு அறிவித்துள்ளார்.

மின்தடை:

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் தவறாமல் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. மின்சார கேபிள்கள் வாயிலாக, டிரான்ஸ்பார்மர், மின் விநியோக பெட்டிகள் உதவியுடன் மின் வாரியம் மின் சப்ளை செய்து வருகிறது. சில சமயங்களில், போதிய அளவு மின்சாரம் கிடைத்தாலும் மின் பெட்டிகள் சேதம் காரணமாக சில இடங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், இவ்வாறு சேதம் அடைந்த பெட்டிகளில் உள்ள கம்பிகள் திருடப்படுவதோடு, வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளால் விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவதாக மின்வாரியத்துக்கு புகார்கள் வருகின்றன.

Exams Daily Mobile App Download

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். இந்த மின்தடை அறிவிப்பு பற்றிய தகவல் முன்னதாகவே உதவி செயற்பொறியாளருக்கு அறிவிக்கப்படும். அந்த வகையில் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட சங்கனாங்குளம் மற்றும் நவ்வலடி துணை மின் நிலையங்களில் 23-ந் தேதி (நாளை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

தமிழக உழவர் சந்தைகளில் புதிய அம்சம் – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!

எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் நவ்வலடி, ஆற்றங்கரைபள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம், மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிக்குறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here