தமிழகத்தில் நாளை (ஜூன் 18) மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூன் 18) மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 18) மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 18) மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

திருவள்ளூர் கோட்டத்தை சார்ந்த காக்களூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மறுநாள் ஜூன் 18ம் தேதி (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படவுள்ளதாக திருவள்ளூர் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

மின்தடை அறிவிப்பு

மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் மின்சாரத்தை அலட்சியமாகவோ, தவறுதலாகவோ பயன்படுத்தினால் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும். ஆகையால், மிக பாதுகாப்பாக முன் எச்சரிக்கை உடன் பயன்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தியதால் எந்த அளவுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு திமுக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, மாதம் ஒரு முறை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு, மின் சாதனங்களில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டு இருக்கிறதா, மின்கசிவு உள்ளதா மற்றும் மரக் கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு ஊரடங்கு உத்தரவில் புதிய தளர்வுகள் அமல் – நகர நிர்வாகம் முடிவு!

அந்த வகையில் திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட காக்களூர், காக்களூர் ஹவுசிங் போர்டு, பூண்டி, ஒதப்பை, காக்களூர் சிட்கோ, நரசிங்கபுரம், ஆஞ்சநேயபுரம், புல்லரம்பாக்கம், மெய்யூர், குஞ்சலம், பென்னலூர்பேட்டை, ஈக்காடு, செவ்வாப்பேட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் சார்ந்த பணிகளை மேற்கொள்வதால் நாளை சனிக்கிழமை ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here