தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தற்போது இப்பதிவில் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் பராமரிப்பின் போது நடைபெறும். மேலும் மின் இணைப்புகளை சரி பார்த்தல் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெறுகிறது.
Exams Daily Mobile App Download
இப்பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இது குறித்து அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்கின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை செங்கல்பட்டு ,மாவட்டம் பூஞ்சேரியில் மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட வேலூர் துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
அதனால் பெரும்பாக்கம், மடையம்பாக்கம், பாக்கூர், பூஞ்சேரி, வேலூர் பெரிய காலனி, சிறுவங்குனம், மேலப்பட்டு, வீரபோகம், பரமன்கேணி, சீக்கினாங்குப்பம், பெருந்துறவு, கொடூர், சத்தியமங்கலம், வேட்டைக்கார குப்பம், மடுவங்கரை, வேலுர், அச்சு விளாகம், கரிக்காமலை, சத்திரம் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை (ஜூன் 24) காலை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.