திருப்பூரில் நாளை (மே 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
திருப்பூரில் நாளை (மே 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூரில் நாளை (மே 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூரில் நாளை (மே 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை திருப்பூரில் காங்கேயம் மின்வாரியக் கோட்டத்துக்கு உட்பட்ட தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், முத்தூா் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மின்கசிவு மற்றும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடப்பதாலும் இதில் பொதுமக்கள் கவனிக்காமல் மின்கம்பிகளில் நடந்து சென்று தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் நாளை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் மின்வாரியக் கோட்டத்துக்கு உள்பட்ட தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், முத்தூா் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரையில் நாளை (மே 12) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான கம்பளியம்பட்டி, ஆண்டிபாளையம், காவலிபாளையம், லக்குமநாயக்கன்பட்டி, புங்கந்துறை, வலசுபாளையம், குருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி!

அத்துடன் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான மூத்தாம்பாளையம், கோவில்பாளையம், மங்களப்பட்டி, அய்யம்பாளையம், கே.வி.புதூா், ஆத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மேலும் முத்தூா் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான அமராவதிபாளையம், காந்தி நகா், வரட்டுக்கரை, வாய்க்கால் மேட்டுபுதூர், ராசாத்தாவலசு, முத்தூர் – ஈரோடு சாலை, தண்ணீா்பந்தல், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (மே 12) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here