சிவகங்கையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
சிவகங்கையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
சிவகங்கையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
சிவகங்கையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் சிவகங்கையை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் அவ்வப்போது மின்கம்பங்களில் பழுது, மின் இணைப்பு துண்டிப்பு, மின் கசிவு போன்ற பழுதுகள் ஏற்பட்டு விடுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக பல விபத்துகள் நிகழ்கின்றன. மின்கம்பங்களில் ஏற்படும் கசிவின் காரணமாக பெரும்பாலும் மழைக் காலங்களில் தான் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், சிறிய அளவில் காற்று வீசினாலும் கூட மின் கம்பங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்தடை நிகழ்கிறது. இதனால், அவ்வப்போது பொதுமக்கள் மின்கம்பங்களை சரியாக பழுது பார்க்கும் படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். மின் கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை சரிப்படுத்த தமிழக அரசும் அவ்வப்போது பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இருந்தாலும் கூட மின்கம்பங்களில் அவ்வப்போது பழுதுகள் ஏற்படுகிறது. மின்கம்பங்களில் ஏதேனும் கோளாறு, மின் இணைப்பு துண்டிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளதா என்பதனை மாதந்தோறும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னனு சாதனங்கள் அனைத்தும் பழுது பார்க்கப்படுகிறது. மின் தடை செய்யப்பட உள்ள தோல்விகள் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளதால் சிவகங்கை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? அரசு விளக்கம்!

சிவகங்கை நகரில் மின்தடை அறிவிக்கப்படவுள்ள பகுதிகள் இதோ, ஓவா்சியா் பிள்ளை தெரு, காவலா் குடியிருப்பு, பிள்ளையாா்கோயில் தெரு, காந்தி வீதியில் ராமச்சந்திரா பூங்கா முதல் கேசவன் மளிகை கடை வரை, காமராஜா் காலனி, எஸ்.பி. பங்களா, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானகுடி, பனையூா், பையூா், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், வல்லனி, உடையநாதபுரம், கூத்தாண்டாம், தென்றல் நகா், மதுரை சாலை, பிஎஸ்ஆா் நகா், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சாமியாா்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here