சென்னையில் ஜூன் 22ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு விவரம்!

0
சென்னையில் ஜூன் 22ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - முழு விவரம்!
சென்னையில் ஜூன் 22ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - முழு விவரம்!
சென்னையில் ஜூன் 22ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு விவரம்!

சென்னையில் வரும் செவ்வாய் அன்று பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ள நிலையில், மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மின்பராமரிப்பு பணிகள் ஏதும் நடக்காத நிலையில், மொத்த மின்வாரியத்தின் இயந்திரங்களும் பகுதியாக பிரிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் ஜூன் 19ம் தேதி முதல் தொடங்கபட்டுள்ளது. மின்பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்கள் மாவட்ட வாரியாக தயாரிக்கப்பட்டு மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடக்கும் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு மின்தடை செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு – 25 ஆயிரம் பேர் கருத்து!

சென்னையில் வரும் ஜூன் 22ம் தேதியான செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளது. மதியம் 1 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும். மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் மின்வாரியத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடி பகுதியின் ஆண்டாள் நகர், அன்னை தெரேசா, எஸ்.ஆர் நகர், ஆர், ஆர்.ஆர் நகர் மற்றும் நீலாங்கரை பிரிவுகள். ஆவடி பாண்டேஸ்வரம் பகுதியின் பாண்டேஸ்வரம் கிராமம், கதவூர், வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். திருமுல்லைவாயில் பகுதியின் எல்லம்மன்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். புழல் பகுதியின் புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை 1,2 3. ஈஞ்சம்பாக்கம் பகுதியின் ராஜீவ்காந்தி நகர், பனையூர் பள்ளி தெரு, சமுத்திரா சாலை, பனையூர் குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். செங்குன்றம் பகுதியின் கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், சென்றம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மேலும், ஆவடி பகுதியின் வைஸ்னவ் நகர், பாரதி நகர், ஆசினி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மயிலாப்பூர் பகுதி, ராம கல்யாண மண்டபம், பி.ஆர்.எஸ் மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். ஐ.சி.எப் பகுதியின் சென்னை பாட்டை ரோடு, மூர்த்தி நகர், வடக்கு திரமலை நகர், காந்திநகர், ராஜிவ்காந்தி நகர், ஆபிசர் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மந்தவெளி பகுதியின் ஆணடாள் நாய்யப்பன் தெரு, நல்லப்பன் தெரு, டி.வி.எஸ் கோயில் தெரு மற்றும் மசூதி தெரு. அடையாறு பிரிவு : தரமணி, சின்னமாலை, இந்திரா நகர், பாலவாக்கம், அடையார், பனையூர், வேளச்சேரி மேற்கு மற்றும் மையம் பிரிவுகள்.

அம்பத்தூர் பகுதியின் லேக்வியூ கார்டன், சக்தி நகர், பெருமாள் கோயில், அகரஹரம், பன்னீர்நகர், திருவள்ளுவர் சாலை, குருநாத் தெரு, எம்.டி.எச். ரோடு, ராஜா தெரு, தென்றல் தெரு, திருவேற்காடு பஸ் நிலையம், பல்லவன் நகர், வடக்கு அவென்யூ, சிவன் கோயில், செங்குட்வன் தெரு, கலக்டர் நகர், டி.வி.எஸ். அவென்யூ , வெங்கடாபுரம், வஓசி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். அய்யப்பாக்கம் பகுதியின் திருவேற்காடு ரோடு, பருத்திப்பட்டு, அய்யப்பாக்கம்.

TN Job “FB  Group” Join Now

செம்பியம் பகுதியின் பாரத் நகர், அன்னை இந்திரா நகர், காமராஜ் நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், சிட்கோ நகர் 1 முதல் 12 பிளாக்ஸ், நேரு நகர், பாலகுமரன் நகர், சுந்தரம் நகர், ஜெயராம் நகர், வளர்மதி நகர், சத்தியா சாய் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். கொளத்தூர் பகுதியின் ஜி.கே.எம் காலனி, அக்பர் சதுரகம், சாய் நகர், அவ்வை தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். தண்டையார்பேட்டை பகுதியின் வண்ணியம்பாக்கம், கலைஞர் நகர், ஜெயராமபுரம், புங்கம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். போரூர் மாங்காடு பகுதியின் போரூர் பகுதி, மாங்காடு, குன்றத்தூர், கொவூர், மலையம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!