தமிழகத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடப்பதற்கான காரணங்கள், மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!

இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றி மின்பாதையினை பராமரிக்கவே தற்போது இந்த மின் தடையை ஏற்படுத்த இருப்பதாக மின் வாரியம் சார்பில் அறிவித்து உள்ளனர்.

TN MRB ரூ.62,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டும்!

மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள், கோட்டை கருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலபுரம், திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, விஜயநாராயணம், குட்டம், ஆனைகுடி, முதுமொத்தான்மொழி மற்றும் வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, மற்றும் மாவடி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here