தமிழகத்தில் நாளை (செப்.14) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (செப்.14) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப்.14) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப்.14) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப்.14) திருநெல்வேலியில் மானூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை

தமிழகத்தில் மின் கம்பங்களில் உண்டாகும் பழுதுகளை உடனடியாக சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை திருநெல்வேலியில் மானூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால் நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மானூர் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் என்று மின்வினியோக செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். அதன்படி இப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். அதனால் இப்பகுதியில் வசித்து கொண்டிருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரிய செயற்பொறியியலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிரடி சரிவை கண்ட ஆபரண தங்கத்தின் விலை – சவரனுக்கு ரூ.160 குறைவு! நகைப்பிரியர்கள் உற்சாகம்!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மானூர் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் வழக்கம் போல மின் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here