தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 5) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 5) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 5) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 5) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள உப மின்நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 5) மாதாந்திர பணி நடைபெற உள்ள காரணத்தால், மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

மின்தடை :

மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் முன்னரே அறிவிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

இந்த வகையில் நாளை ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. அதாவது விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள உப மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியின் காரணமாக அங்குள்ள சில பகுதிகளில், மின் விநியோகம் தடை செய்யப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவித்துள்ளார். மேலும் நாளை மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த முழு விவரமும் கீழ் வருவன.

இந்தியாவில் ஒரே நாளில் 19,893 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்

மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் :

பி. எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், ஐ.என்.டி.யு.சி. நகர், பாரதி நகர், ஆர். ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூர், மொட்ட மலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர். நகர், லட்சுமிபுரம், ராம்கோ நகர், நத்தம் பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்கபாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!