IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? TCS நடத்தும் தேசிய தகுதித்தேர்வு! முழு விவரங்கள் இதோ!

0
IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? TCS நடத்தும் தேசிய தகுதித்தேர்வு! முழு விவரங்கள் இதோ!
IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? TCS நடத்தும் தேசிய தகுதித்தேர்வு! முழு விவரங்கள் இதோ!
IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? TCS நடத்தும் தேசிய தகுதித்தேர்வு! முழு விவரங்கள் இதோ!

தகவல் தொழில்நுட்ப பிரிவில் பட்டம் பெறும் பொறியியல் பட்டதாரிகள் ஐடி துறையில் வேலை பெற வாய்ப்பு பெறுவதற்காக TCS நிறுவனம் தேசிய அளவிலான தகுதி தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கான தகுதி, பதிவு உள்ளிட்ட விவரங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தகுதித்தேர்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான தேசிய தகுதித் தேர்வை (NQT) அவர்களின் இறுதியாண்டு படிப்புகளின் போது நடத்தி வருகிறது. அந்த வகையில் TCS நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த NQT தேர்வு மாணவர்கள் தங்களை IT துறை வேலைக்கு தயார்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. இப்போது IT துறையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கு இந்த TCS NQT தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் இதற்கான விண்ணப்ப பதிவுகள் திறக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் ‘செம்பருத்தி’ சீரியல் – கிளைமாக்ஸ் இது தான்!

இது குறித்த அறிவிப்பின்படி, 2023ல் பட்டம் பெறும் மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு தகுதியுடையவர்கள் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது டிசிஎஸ் தேசிய தகுதித் தேர்வுக்கான தகுதிகளை பொறுத்தளவு, இளங்கலை தொழில்நுட்பம் (பி.டெக்.), இளங்கலை பொறியியல் (B.E.), மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி (எம்.டெக்.), முதுகலை பொறியியல் (எம்.இ.), மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (எம்.சி.ஏ.) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் எந்தவொரு பிரிவிலும் முதுகலை அறிவியல் (M.Sc. / M.S.) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அந்த வகையில் TCS NQT தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் ஏற்கனவே துவங்கி இருக்கும் நிலையில் பதிவுகளை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜூலை 22 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப பதிவு முடிந்ததும் ஆகஸ்ட் 15 முதல் துவங்கும் தேர்வு பல தேதிகளில் நடத்தப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசிஎஸ் nex tstep போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட சில சான்றிதழ்களை பயன்படுத்தி போர்ட்டலில் பதிவு செய்யலாம். அந்த வகையில் பதிவு செய்யும் போது, சோதனை முறையை தேர்ந்தெடுக்க விருப்பம் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!