அக்டோபர் மாதத்தில் இவ்வளவு நாட்கள் வங்கி விடுமுறையா – முன்பே தெரிஞ்சு வச்சுக்கோங்க!
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்திற்குரிய விடுமுறை பட்டியலை வெளியிடும். இதில் இந்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலில் 10 நாட்கள் வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்து விரிவான தகவல்களை பார்ப்போம்.
வங்கி விடுமுறை
இந்தியாவில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கி செயல்படுவதற்கான வழிமுறைகளை வகுத்து வழங்குகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிடுகிறது. இந்த விடுமுறை பட்டியலானது அனைத்து மாநிலங்களிடம் இருந்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் பின்பு தயார் செய்யப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் முக்கிய பண்டிகை தினம் கொண்டாடப்படும். அதனால் அம்மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டியிருக்கும்.
அதாவது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவதால் அம்மாநிலத்தில் இயங்கும் வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். இதையடுத்து வருகிற அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் குறித்து RBI அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, தீபாவளி, தசரா உட்பட மொத்தமாக 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் அக்டோபர் 22 முதல் அக்டோபர் 25 வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் 22 அன்று 4வது சனிக்கிழமை என்பதாலும், மறுநாள் (அக்டோபர் 23) ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இதையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 24,25 ஆகிய இரு நாட்களுக்கு விடுமுறை என்பதால் தொடர்ந்து விடுமுறை வருகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் குஷியில் உள்ளார்கள். இம்மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.
வங்கி விடுமுறை நாட்கள்:
02.10.2022 – காந்தி ஜெயந்தி (ஞாயிற்றுக்கிழமை)
04.10.2022 – தசரா பண்டிகை (செவ்வாய்)
08.10.2022- இரண்டாம் சனிக்கிழமை
09.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
16.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
தமிழக பள்ளிகளுக்கு விடுமுறையா? வலுக்கும் கோரிக்கைகள் – அமைச்சர் சொன்ன விளக்கம்!
22.10.2022 – நான்காவது சனிக்கிழமை
23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
24.10.2022 – தீபாவளி பண்டிகை (திங்கட்கிழமை)
25.10.2022 – தீபாவளி பண்டிகை (செவ்வாய்க்கிழமை)
30.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்