செப்டம்பர் மாதத்தில் “இத்தனை” நாட்கள் வங்கி விடுமுறையா? தெரிஞ்சுக்காம இருக்காதிங்க!

0
செப்டம்பர் மாதத்தில்
செப்டம்பர் மாதத்தில் "இத்தனை" நாட்கள் வங்கி விடுமுறையா? தெரிஞ்சுக்காம இருக்காதிங்க!
செப்டம்பர் மாதத்தில் “இத்தனை” நாட்கள் வங்கி விடுமுறையா? தெரிஞ்சுக்காம இருக்காதிங்க!

இந்தியாவில் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

வங்கி விடுமுறை

இந்தியாவில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. மேலும் அனைத்து வங்கிகளுக்கும் வழிமுறை வகுத்து கொடுக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கமாகும். மேலும் இந்த விடுமுறை குறித்து அனைத்து மாநிலங்களிடம் இருந்தும் பரிந்துரைகள் கேட்கப்பட்டு அதன் பின்பு பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இந்த பட்டியலில் குறிப்பிடப்படும் விடுமுறை தினங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ. 38,000 ஊதியம்!

இதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை தினங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்று விரிவாக பார்ப்போம். இதையடுத்து இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செப்டம்பர் மாதம் வங்கிகளுக்கு 2வது மற்றும் 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர 8 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பனாஜியில் விநாயக சதுர்த்தி 2வது நாளை முன்னிட்டு செப்டம்பர் 1ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதே போல் செப்டம்பர் 7ம் தேதி அன்று ஓணம் பண்டிகை காரணமாக கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு 2வது மற்றும் 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை தினங்கள் வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியில் சேவைகள் கிடைக்கும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

01.09.2022 : விநாயகர் சதுர்த்தி 2வது நாள் ( பனாஜி)

04.09.2022: ஞாயிற்றுக்கிழமை

06.09.2022: கர்ம பூஜை – ராஞ்சி

07.09.2022: முதல் ஓணம் – கொச்சி, திருவனந்தபுரம்

08.09.2022: திருவோணம் – கொச்சி, திருவனந்தபுரம்

09.09.2022: இந்திரஜாத்ரா – காங்டாக்

10.09.2022: இரண்டாவது சனிக்கிழமை, ஸ்ரீ நரவண குரு ஜவந்தி – கொச்சி, திருவனந்தபுரம்

11.09.2022: ஞாயிற்றுக்கிழமை

18.09.2022: ஞாயிற்றுக்கிழமை

21.09.2022: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் – கொச்சி, திருவனந்தபுரம்

24.09.2022: நான்காவது சனிக்கிழமை

25.09.2022: ஞாயிறு கிழமை

26.09.2022: நவ்தாத்ரி ஸ்தாப்னா/மேரா சௌரன் ஹௌபா ஆஃப் லைனிங்தௌ சனாமாஹி – ஜெய்ப்பூர், இம்பால்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here