தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாதா? மத்திய அரசு விளக்கம்!

0
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாதா? மத்திய அரசு விளக்கம்!
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாதா? மத்திய அரசு விளக்கம்!
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாதா? மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவமாக கொண்டாடும் ஒரு நிகழ்வு என்றால் அது சுதந்திர தின விழா தான். இந்நிலையில் இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழாவினை கொண்டாட பல மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாராகி வருகிறது. இதையடுத்து தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம்:

ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் வடமாநிலங்களில் ரேஷன் கடைகளில் 20 ரூபாய்க்கு கட்டாயப்படுத்தி தேசிய கொடி விற்கப்படுவதாகவும் கொடியை வாங்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது ஹரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய கொடி வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது கர்னல் மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் தேசியக்கொடி வாங்கினால் தான் உணவுப் பொருள் வழங்கப்படும் என கட்டாயப்படுத்தியதால், அட்டைதாரர்கள் அதிக கோவமடைந்தனர். இதையடுத்து சில பெண்கள் மூவர்ண கொடிகளை கையில் ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதாவது நமது நாட்டு கொடியும் தேசப்பற்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் உள்ளது.

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி Instant ஆக டிக்கெட் முன்பதிவு

ஆனால் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களிடம் கொடிக்காக 20 ரூபாய் கேட்டு கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை அடுத்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய கொடி வாங்க , ரேஷன் அட்டைதாரர்களை வற்புறுத்தக் கூடாது எனவும் ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!