மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைந்த VJ அர்ச்சனா – தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!

0
மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைந்த VJ அர்ச்சனா - தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!
மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைந்த VJ அர்ச்சனா - தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!
மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைந்த VJ அர்ச்சனா – தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!

தமிழ் சின்னத்திரையில் சிறந்த தொகுப்பாளராக புகழ் பெற்றவர் அர்ச்சனா. அவருக்கு சமீபத்தில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது குணமடைந்து புதிய நிகழ்ச்சி ஒன்றில் களமிறங்கி உள்ளார்.

தொகுப்பாளினி அர்ச்சனா:

சன் டிவி-யில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுமானவர் அர்ச்சனா. அதன் பிறகு, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்நிலையில் அவரின் யூடியூப் சேனலில் தனது வீட்டின் பாத்ரூம் காட்டி அதன் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் இருந்து நடிகை திடீர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், அவருக்கு சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைப் கேட்டதும் ரசிகர்கள் பதறி போனார்கள். ஆனால் தனது கடினமான தருணத்தையும், காமெடியாக தெரிவித்த அர்ச்சனா அதில் இருந்து நல்லபடியாக மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், மீண்டும் படபிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.

முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்!

இந்த நிலையில் விஜய்யில் நம்ம வீட்டு கல்யாணம் என்ற ஷோ படப்பிடிப்பு நடந்துள்ளது. சினேகன் மற்றும் கனிகாவின் திருமண வரவேற்பு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. முதன்முதலாக அவர் பூரண குணமடைந்து அந்த நிகழ்ச்சியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலந்து கொண்டிருக்கிறார் , அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!