விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் களமிறங்கும் அறந்தாங்கி நிஷா – வெளியான வீடியோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் களமிறங்கும் அறந்தாங்கி நிஷா - வெளியான வீடியோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் களமிறங்கும் அறந்தாங்கி நிஷா – வெளியான வீடியோ!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல திருப்பங்கள் வெளியாகி விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் புதிதாக அறந்தாங்கி நிஷா நடிக்க இருப்பதாக படப்பிடிப்புத்தள வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து TRPயில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து வருகிறது. இந்த சீரியலில் முன்னதாக 600 எபிசோடுகளுக்கு மேல் ரோஷினி நடித்த நிலையில் அவர் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அதனால் சீரியலில் புதிதாக வினுஷா தேவி நடிக்க தொடங்கினார். புதிய கதாநாயகி மாற்றப்பட்டதால் சீரியல் TRPயில் தாக்கம் ஏற்படாத வண்ணம் பல புதிய திருப்பங்கள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த பாரதி கண்ணம்மா தற்போது சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

Vijay TV Big Boss 5 Promo | தாமரைக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசன் – பிரியங்காவிற்கு நாடகம் போட தெரியாது!

மேலும் கண்ணம்மா உடன் 6 மாதம் பாரதி சேர்ந்து வாழ நீதிபதி உத்தரவிட்ட நிலையில் 6 நாட்கள் தான் சேர்ந்து இருப்பேன், அப்பறம் நீயே உன் வாயால் என்னுடன் வாழ மாட்டேன் என சொல்ல வைப்பேன் என பாரதி குறிக்கோளுடன் இருக்கிறார். அதனால் பல திட்டங்களை அவர் தீட்டுகிறார். மறுபக்கம் பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க சௌந்தர்யா பிடிவாதமாக உள்ளார். அதனால் சீரியலில் சுவாரசியம் அதிகரித்துள்ளது. பாரதி குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ராவின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் – தாயார் உருக்கம்!

இந்நிலையில் தற்போது கூடுதல் சுவாரசியத்தை அதிகரிக்க நடிகை அறந்தாங்கி நிஷா சீரியலில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. தற்போது படப்பிடிப்பு தளத்தில் அவர் ஹேமா உடன் எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஏற்கனவே பாரதியை வைத்து சீரியலில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில், அறந்தாங்கி நிஷா வந்தால் கதையில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!