பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் ரிலீஸ் நேரம் அதிகாரப்பூரவ அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

0
பீஸ்ட் படத்தின் 'அரபிக் குத்து' பாடல் ரிலீஸ் நேரம் அதிகாரப்பூரவ அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்!
பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் ரிலீஸ் நேரம் அதிகாரப்பூரவ அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான அரபிக் குத்து இன்று மாலை வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அரபிக் குத்து:

நடிகர் விஜய் கடைசியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். போன பொங்கலுக்கு வெளியான இந்த படத்திற்கு பிறகு எந்த படமும் விஜய் நடிப்பில் வெளியாகவில்லை. அதிலும், மஸ்டெற்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்தார். இதனால் மிகவும் மாசாகவும், மிரட்டலாகவும் மாஸ்டர் படம் இருந்தது. மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது மாஸ்டர் படம். இதனால் அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து விட்டது.

கண்ணனிற்கு பாசத்துடன் சாப்பாடு ஊட்டிய மூர்த்தி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” புது கடை திறப்பு கொண்டாட்டம்!

இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்¥சர்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், நடிகர் விஜய் நடிப்பில் தயாராகும் படம் தான் பீஸ்ட். பீஸ்ட் படத்தில் விஜய் கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் தமிழில் முகமூடி படத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னதாக நடித்திருந்தார். அப்போது அந்த அளவிற்கு பிரபலமாக நிலையில், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த படத்தில் டாக்டர் படத்திற்கு பிறகு வெளியாகும் நெல்சனின் படம் என்பதால் காமெடி வேற லெவெலில் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

‘ராஜா ராணி’ ஆலியா – சஞ்சீவ் முதல், ‘செம்பருத்தி’ ஷபானா – ஆர்யன் வரை | சீரியல் பிரபலங்களின் லவ் ஸ்டோரி!

இந்த படத்தில் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்து அளிக்கும் விதமாக ஒரு புதிய சம்பவம் நடந்துள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் விஜய்க்கு பாடல் எழுதியுள்ளார். இந்த பாட்டிற்கு அரபிக் குத்து என்று பெயரிட்டுள்ளனர். கடந்த வாரம் வெளியான இந்த பாடலின் டீசர் ட்ரெண்டிங்கில் சென்றது. தற்போது இந்த பாடல் எத்தனை மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி அதிக எதிர்ப்பார்ப்பை கிளப்பிய அரபிக் குத்து பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!