ஏப்ரல் மாதத்தில் இன்னும் 11 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஏப்ரல் மாதத்தில் இன்னும் 11 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஏப்ரல் மாதத்தில் இன்னும் 11 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஏப்ரல் மாதத்தில் இன்னும் 11 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

சமீபத்தில் துவங்கி தற்போது நடைபெற்று வரும் ஏப்ரல் மாதத்தில் இன்னும் 11 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வங்கி விடுமுறை

பொதுவாக, ஒவ்வொரு ஆண்டு துவங்கும் போதும் அந்த ஆண்டிற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்தில் ஏப்ரல் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இது குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின், விடுமுறை பட்டியலின் படி ஏப்ரல் 1ம் தேதி வருடாந்திர கணக்கு மூடல் காரணமாக வங்கி விடுமுறையுடன் இந்த மாதம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் உகாதி/குடி பத்வா பண்டிகையை முன்னிட்டு விடுமுறை ஏப்ரல் 2 அன்று வங்கிகள் அடைக்கப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? கொரோனா 4வது அலை அச்சம் எதிரொலி!

இதனை தொடர்ந்து ஏப்ரல் 3 பொது விடுமுறையை தொடர்ந்து நேற்று (ஏப்ரல்.4) முதல் வங்கிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் இம்மாதத்தில் இன்னும் 11 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குறிப்பிட்டுள்ளது. இந்த விடுமுறைகளில் வார இறுதி நாட்கள், மாநிலங்களுக்கான விடுமுறைகள், மத விடுமுறைகள் ஆகியவையும் அடங்கும் என்பதால் இது நாடு தழுவிய விடுமுறையாக இருக்காது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது ஏப்ரல் மாதத்தில் மீதமிருக்கும் 11 விடுமுறை நாட்களின் பட்டியலை கீழே விரிவாக பார்க்கலாம்.

வங்கி விடுமுறைகள்:

 • ஏப்ரல் 5: பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாளையொட்டி ஹைதராபாத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
 • ஏப்ரல் 9: இரண்டாவது சனிக்கிழமை
 • ஏப்ரல் 10: ஞாயிறு
 • ஏப்ரல் 14: பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/மஹாவீர் ஜெயந்தி/பைசாகி/வைசாகி/தமிழ்ப் புத்தாண்டு தினம்/செய்ரோபா/பிஜு விழா/போஹாக் பிஹு ஆகிய நாட்களில் ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

 • ஏப்ரல் 15: புனித வெள்ளி / வங்காள புத்தாண்டு தினம் (நபபர்ஷா) / ஹிமாச்சல் தினம் / விஷு / போஹாக் பிஹு ஆகியவற்றின் போது ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
 • ஏப்ரல் 16: போஹாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு அசாமில் வங்கிகள் மூடப்படும்.
 • ஏப்ரல் 17: ஞாயிறு
 • ஏப்ரல் 21: கரியா பூஜையை முன்னிட்டு அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
 • ஏப்ரல் 24: ஞாயிறு
 • ஏப்ரல் 29: ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடாவை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.
 • ஏப்ரல் 30: நான்காவது சனிக்கிழமை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here