தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேரோட்டம் ஏப்.29-ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே சித்திரைத் தேர் திருவிழாவினை முன்னிட்டு வருகிற 29.04.2022 வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா வருடம்தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த கோவிலில், மாதம் 12 பல்வேறு வைபவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் தொடக்கமாக ஏப்ரல் 21 ம் தேதி அன்று அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு கொடி மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.30 மணி முதல் காலை 5.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்பு நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மேலும் விழாவின் இரண்டாம் நாள் 22-ந்தேதி அன்று மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 23-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 24-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்?

இன்று காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 26-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் உலா வருகிறார்.மேலும் 27-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 28-ந் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. 30-ந் தேதி சப்தாவரணம், 1-ந்தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. இந்த திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பார்கள். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டத்தையொட்டி வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

ExamsDaily Mobile App Download

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும். இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்றால் இந்த விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே 7-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!