மாநிலம் முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

0
மாநிலம் முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை அறிவிப்பு - அரசு உத்தரவு!
மாநிலம் முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை அறிவிப்பு - அரசு உத்தரவு!
மாநிலம் முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

இந்தியாவில் வருடந்தோறும் மகாவீர் ஜெயந்தி, பைசாகி மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் ஆகிய தினங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இதனால் நாளை ஏப்ரல் 14ஆம் தேதி (வியாழன்) விடுமுறையாக பஞ்சாப் அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

பொது விடுமுறை:

மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். அகிம்சை, கருணை மற்றும் தன்னலமற்ற தன்மை போன்ற அவரது போதனைகளின் மூலம் நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கான ஒளிமிகுந்த வழிகளை மனிதகுலத்திற்கு பகவான் மகாவீரர் காட்டினார். சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை போதித்த நமது நாட்டின் மிகப்பெரிய இறைத்தூதர்களில் அவர் ஒருவராவார். சமணர்களின் முக்கிய பண்டிகையான மகாவீரர் ஜெயந்தி இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் கொடைப் பணிகள், ஸ்தவன்களை வாசித்தல், தேரில் இறைவனின் ஊர்வலம் மற்றும் சமண முனிவர்களின் ஆன்மீக சொற்பொழிவு ஆகியவை இந்த பண்டிகையின் சிறப்பம்சங்கள் ஆகும்.

பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் 40 நாட்கள் கோடை விடுமுறை – ஜாக்பாட் உத்தரவு!

இதை அடுத்து பைசாகி ஒரு அறுவடை திருவிழா, ஒரு பஞ்சாபி புத்தாண்டு திருவிழா, மற்றும் கல்கா (சீக்கிய மத சகோதரத்துவம்) ஆகியவற்றின் ஸ்தாபகத்தின் நினைவு நாள் ஒரு சமயத்தில் உருவானது. பஞ்சாப் மாநிலம் முழுவதும், குறிப்பாக அம்ரித்ஸரில் இந்த திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பைசாகி பண்டிகை, பகங்கா நடனம், நாட்டுப்புற இசை, மற்றும் கண்காட்சி என அமிர்தசராரின் கோல்டன் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். மேலும் ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். நடப்பு வருடம் நாளை (ஏப்ரல் 14ம் தேதி) மகாவீர் ஜெயந்தி, பைசாகி மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் ஆகிய தினங்களை முன்னிட்டு பஞ்சாப் அரசு மாநிலம் முழுவதும் நாளை விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here