தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஏப்ரல் 13ம் தேதி அன்று சித்திரை தேர்திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் பண்டிகைகள் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தல திருவிழாக்கள் போன்றவைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏனெனில் விழாக்களில் கலந்து கொள்ள வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். அவர்களுக்கு ஏதுவாக அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த வகையில் தற்போது தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயிலில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

இத்திருத்தலத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020ம் ஆண்டு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது. காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இக்கோயில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற பெருமையை பெற்றது தஞ்சை பெரிய கோயில். சிறந்த கட்டிட கலைக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்கி வருகிறது. புகழ் பெற்ற பெரிய கோயிலை காண வெளி மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகை புரிவர்.

ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது இங்கு தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனையடுத்து தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஏப்ரல் 13ம் தேதி அன்று சித்திரை தேர்திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here