தமிழகத்தில் ஏப்ரல் 11ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 11ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் ஏப்ரல் 11ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் ஏப்ரல் 11ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 11ம் தேதியன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பங்குனி மாதத்தில் பல்வேறு மதவழிபாட்டு தளங்களிலும் திருவிழாக்கள் கோலாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா நேற்று (ஏப்ரல்.5) கொடியேற்றத்துடன் துவங்கி இருக்கிறது. அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 4ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து வரும் 11ம் தேதி தேரோட்டம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த விழாக்கள் எதுவும் சிறப்பாக நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு பங்குனி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல். 5ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனி திருவிழாவானது ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியான தேரோட்டம் வரும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தேரோட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனால் ஏப்ரல் 11ம் தேதியன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here