தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!

0
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!

தமிழகத்தில் தற்போதைய பண்டிகை காலத்தில் இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரிய வந்தால் அந்த பேருந்து சிறைபிடிக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.

அதிக கட்டணம்:

தற்போது அக்டோபர் 14 ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை தமிழகத்தில் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை காரணமாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் படிக்கும் மாணவர்கள் மேலும், சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் நபர்களால் என்று அதிக பயணிகள் பயணிப்பார்கள். இதற்காக அரசு முன்னதாக கூடுதலாக சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

இருப்பினும், பற்றாக்குறை காரணமாக பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களும் மேலும் எதிர்கட்சியினரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன், பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்கள் தற்காலிக வெளியூர் பேருந்து முனையமாக செயல்படும்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை!

பண்டிகை விடுமுறை காலத்தினை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் எடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகள் மற்றும் தமிழ்நாட்டிற்குரிய வரி செலுத்ததாத ஆம்னிப் பேருந்துகள் சிறை பிடிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படும் பட்சத்தில் 1800 4256 151 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here