தமிழக அரசின் ஆசிரியர் பணிவாய்ப்பு – ஜன.18 விண்ணப்பிக்க கடைசி நாள்!!
தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 18ம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணிவாய்ப்பு:
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் பதவி உயர்வு பெற்று பணி மாறுதல் பெற்று சென்று விட்டனர். இதனால், அவர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளது. அப்பணியிடங்களில் தற்காலிகமாக ஆசிரியர்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மாவட்ட வாரியாக இடைநிலை / பட்டதாரி/ மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் காலியிட எண்ணிக்கை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகமும் தனிப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
ஐடி துறையில் அதிகரிக்கும் வாய்ப்புகள் ..இனி நல்ல காலம் பொறக்குது.. மத்திய அமைச்சர் தகவல்!
அதன்படி, சென்னை மாவட்ட ஆதிராவிடர் நலப்பள்ளியில் இடைநிலை / பட்டதாரி/ மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு என்று மொத்தமாக 7 பணியிடங்கள் இருப்பதாகவும், மேலும், TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்கள், பள்ளிக்கு அருகில் உள்ளவர்கள் பட்டியல் இனத்தில் முன்னுரிமை பெற்ற குறிப்பிட்ட கல்வி தகுதியை பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இந்த ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் ஜனவரி 18ம் தேதி மாலை 5:45 மணிக்குள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2ம் தலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலகத்தில் தங்கள் விண்ணப்பங்களை ரிஜிஸ்டர் போஸ்ட் அல்லது நேரடியாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.