தமிழக பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – உயர்நீதிமன்ற கிளை முக்கிய அறிவிப்பு!

0
தமிழக பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - உயர்நீதிமன்ற கிளை முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - உயர்நீதிமன்ற கிளை முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – உயர்நீதிமன்ற கிளை முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என அரசு முடிவு எடுத்திருந்த நிலையில் இது மாணவர்களின் கல்வித் திறனுக்கு மிகவும் ஆபத்தானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள்:

தமிழக அரசுப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 300 இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. எப்போதும் ஆசிரியர் தகுதித் வாரியத்தின் அடிப்படையில் தான் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. மேலும், ஏற்கனவே, நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வான ஆசிரியர்களுக்கும் தற்போது வரைக்கும் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன.

Exams Daily Mobile App Download

இதனால், பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நடத்த தகுந்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால், உடனடியாக காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவது என்பது முடியாத காரியம். அதாவது, ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை பணியிடங்களுக்கு நியமிக்க கால தாமதமாகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு இந்த பணியிடங்களை நிரப்பலாம் என அரசு முடிவெடுத்திருந்தது. மேலும், தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், இது போன்ற தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் போது சில சூழ்ச்சி வேலைகளும் நடைபெறலாம் என பலரும் இந்த புதிய திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். அதிலும், மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் புகட்ட தகுதியே நிர்ணயிக்காமல் ஒரு ஆசிரியரை எவ்வாறு தற்காலிகமாக நியமிப்பது. இது மாணவர்களின் கல்வி திறனுக்கு மிகவும் ஆபத்தானது என உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது. இவ்வாறு தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான தடைவிதிப்பு வழக்கிற்கு உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!