சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம் – கொலிஜியம் உத்தரவு!!

0
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம் - கொலிஜியம் உத்தரவு!!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம் - கொலிஜியம் உத்தரவு!!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம் – கொலிஜியம் உத்தரவு!!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதிவு ஏற்க குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி:

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் ஏ.பி.சாஹி. கடந்த வருடம் அக்டோபர் மாதம், சாஹி தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர், 31-ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெறவுள்ளார். இதனால் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதயாக பதவி ஏற்க உள்ளதாக கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 2ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை – மத்திய அரசு அறிவிப்பு!!

கொல்கத்தாவின் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி 1961-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி பிறந்தார். 1987-ஆம் ஆண்டு சட்டபடிப்பை முடித்து 1990-ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார். இவர் உரிமையியல், கம்பெனி சட்டம், அறிவுசார் சொத்துரிமை போன்ற துறைகளில் வல்லவர். கொல்கத்தா, அலகாபாத், பாட்னா, கர்நாடக உள்ளிட்ட நகரங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். 2006 ஆண்டு முதல் கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய அவர் தற்போது சென்னைக்கு பதவி உயர்வு அடைந்து நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

பொங்கல் பரிசு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு கோரிக்கை!!

அதே போல, சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள வினித் கோத்தாரியை குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!