தமிழக அரசிற்காக 9 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசிற்காக 9 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசிற்காக 9 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசிற்காக 9 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசின் சார்பில் ஆஜராவதற்காக புதிதாக 9 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் பல பிரிவுகளுக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழக அரசு வழக்கறிஞர்கள்:

தமிழக அரசின் சார்பில் வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆட்சி மாற்றத்தின் போது அரசு வழக்கறிஞர்கள் பொதுவாக மாற்றப்படுவார்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. அதன் பின்னர் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் அவர்கள் நியமிக்கப்பட்டார். அவரின் பரிந்துரையின் படி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு வழக்குகளில் ஆஜராவதற்கு தற்காலிக முறையில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

பத்திரமா இருங்க… ஜூலை 17 வரை தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 7 தலைமை அரசு வழக்கறிஞர்கள், மதுரை கிளைக்கு 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மேலும், சென்னை மற்றும் மதுரைக்கு தலா ஒரு அரசு பிளீடர் போன்ற பணிகளுக்கு நியமன விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தவிர 33 கூடுதல் சிறப்பு வழக்கறிஞர்கள் மற்றும் 55 அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் போன்ற 191 அரசு வழக்கறிஞர்கள் பணிக்கும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அரசின் இந்த வழக்கறிஞர் பதவிகளுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவமுள்ளவர்கள் அரசின் இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஜூலை 29ம் தேதி மாலை 5:45 மணிக்குள் பொதுத்துறை அலுவலகத்திற்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் சுயவிவர குறிப்பு மற்றும் தகுந்த ஆவணங்களுடன் 25 ஆண்டுகள் அனுபவமுள்ள மூத்த வழக்கறிஞரிடம் அல்லது சென்னை உயர்நீதிமன்ற சங்கத்தில் அனுபவம் தொடர்பான கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here