தமிழக அரசின் ரூ.50000 பரிசுத்தொகை கொண்ட விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசின் ரூ.50000 பரிசுத்தொகை கொண்ட விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசின் ரூ.50000 பரிசுத்தொகை கொண்ட விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசின் ரூ.50000 பரிசுத்தொகை கொண்ட விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் வழங்கப்பட உள்ள முதலமைச்சர் விருதுகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டடத்தை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் விருது:

தமிழகத்தில் அரசின் துறைகளில் சிறப்பாக பணி செய்த அதிகாரிகள், பொதுமக்களுக்கு தன்னலம் காணாமல் சேவை செய்தவர்கள், வீரதீரசெயல்களில் ஈடுபட்டவர்கள், போன்றவர்களின் செயல்களை பாராட்டும் விதமாகவும், அதன் மூலம் மற்றவர்கள் ஊக்கம் பெறும் விதமாக தமிழக அரசு ஆண்டுதோறும் சுதந்திர தினவிழாவில் பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொடுத்து கௌரவிப்பது வழக்கம்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி அட்டையாக மாற்ற வாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!

நடப்பு ஆண்டிற்கான தமிழக அரசின் முதலமைச்சர் விருதுகளுக்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அரசு அறிவித்துள்ள விருதுகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. நாட்டு நலத்திட்ட பணிகளில் சிறந்த பயிற்சியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்தவர்கள் போன்ற பிரிவுகளில் விருது பெற விண்ணப்பிக்க தனித்தனியாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமுதாய வளர்ச்சி பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகர் ரமேஷ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவின் போது இந்த விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும், 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பித்தவர்களில் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் மட்டும் பரிசீலினை செய்யப்படுவார்கள். விருது பெறுபவர்களுக்கு 50,000 ரூபாய் பணமும், பாராட்டு பாத்திரமும் வழங்கப்படும். குறிப்பாக விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வி, சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!