மத்திய அரசின் “அக்னிபாத்” திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள் – ஜூலை 5 கடைசி நாள்!

0
மத்திய அரசின்
மத்திய அரசின் "அக்னிபாத்" திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள் - ஜூலை 5 கடைசி நாள்!
மத்திய அரசின் “அக்னிபாத்” திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள் – ஜூலை 5 கடைசி நாள்!

மத்திய அரசு இந்திய இராணுவத்தில் இளைஞர்களை நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கும் “அக்னிபாத்” திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் வந்தாலும் கடந்த 24 ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டது. அதில் 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

அக்னிபாத் திட்டம்:

இந்திய ராணுவத்தில் நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியிட்டது. இந்த திட்டத்தின் மூலமாக இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும், வழக்கமான முறைகளில் இராணுவ வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என பல மாநில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தின் படி தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் அவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது. தங்களது குடும்பங்களை விட்டு ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் கழித்து வேலை இழந்த பின் எதிர்காலம் கேள்வி குறியாக இருக்கும் என்பதால் அக்னிபாத் திட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பல மாநில அரசுகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் நான்கு வருடங்கள் கழித்து ராணுவத்தில் இருந்து வெளியே வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வந்தாலும் மத்திய அரசு இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிற்கு தனித்தனியாக ஆட்கள் தேர்வு செய்ய விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. விண்ணப்ப பதிவு ஜூன் 24 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று காலை 10.30 மணி நிலவரப்படி, 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளதாக ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்ப பதிவு ஜூலை 5 ஆம் தேதி உடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here