தமிழக கலெக்டர் ஆபிசில் வேலை – தமிழ் தெரிந்தால் போதும்! விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

0
தமிழக கலெக்டர் ஆபிசில் வேலை - தமிழ் தெரிந்தால் போதும்! விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
தமிழக கலெக்டர் ஆபிசில் வேலை - தமிழ் தெரிந்தால் போதும்! விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
தமிழக கலெக்டர் ஆபிசில் வேலை – தமிழ் தெரிந்தால் போதும்! விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பகுதிநேர தூய்மை பணியாளர் இடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பகுதிநேர தூய்மை பணியாளர் பணியிடத்தில் இருக்கும் காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – முக்கிய நடவடிக்கை!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருந்தவராக இருந்தாலே போதுமானது என்று கூறப்படுகிறது. அத்துடன் இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக வருகிற ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 18 வயது முதல் 30 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும். இதில் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 வயது தளர்வும், பிசி, பிசிஎம் மற்றும் டிஎன்சி பிரிவினருக்கு 2 வயது தளர்வும் வழங்கப்படுகிறது. இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ.3000 சம்பளம் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதார்கள் விண்ணப்பங்களை பெற்று தேவையான ஆவணங்களுடன் இணைத்து வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். அதனால் வேலையில்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வேலைவாய்ப்பு பெற்று கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here