ஆகஸ்ட் 4 முதல் CAT தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம் – வழிமுறைகள் இதோ!

0
ஆகஸ்ட் 4 முதல் CAT தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம் - வழிமுறைகள் இதோ!
ஆகஸ்ட் 4 முதல் CAT தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம் - வழிமுறைகள் இதோ!
ஆகஸ்ட் 4 முதல் CAT தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம் – வழிமுறைகள் இதோ!

CAT 2021 க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 4ம் தேதியான நாளை முதல் தொடங்கப்படுகிறது. விண்ணப்ப செயல்முறை மற்றும் பிற விவரங்களை குறித்து பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CAT 2021:

ஐஐஎம் -களின் பல்வேறு முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு CAT தேர்வு ஒரு நுழைவு தேர்வாக உள்ளது. ஐஐஎம் உறுப்பினர் அல்லாத நிறுவனங்களும் CAT தேர்வு மதிப்பெண் பட்டியலை பயன்படுத்துகிறது. அத்தகைய நிறுவனங்களின் பட்டியல் CAT இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐஐஎம் அல்லாத நிறுவனங்களின் தேர்வு செயல்பாட்டில் ஐஐஎம்களுக்கு எந்தப் சம்பந்தமும் இல்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான CGPA- யுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களின் சதவீதம் அந்தந்த பல்கலைக்கழகம் / நிறுவனம் பின்பற்றும் நடைமுறையின் அடிப்படையில் கணக்கிடப்படும். இளங்கலை /சமமான தகுதித் தேர்வின் இறுதி ஆண்டு தேர்வர்கள் மற்றும் பட்டப் படிப்பை முடித்து முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். CAT 2021 தேர்வின் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 4ம் தேதியான நாளை காலை 10 மணி முதல் தொடங்கப்படுகிறது. அனைத்து வேட்பாளர்களும் iimcat.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CAT 2021 க்கு விண்ணப்பிக்கலாம்.

CAT தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 15, மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் நவம்பர் 28 அன்று மூன்று அமர்வுகளில் நடைபெறும். நடப்பாண்டில் தேர்வு மொத்தம் 158 நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ தளத்தில் முதலில் தனிப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க பதிவு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்ப உருவாக்கப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைய வேண்டும்.
  • பதிவு மற்றும் விண்ணப்ப செயல்முறையை முடிக்க தேவையான விவரங்களை உள்ளிட்டு ஆன்லைனில் பணம் செலுத்திய பின் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

CAT 2021 தேர்வு முறை:

தேர்வு 120 நிமிடங்களில் மூன்று பிரிவாக நடத்தப்படும்.

பிரிவு I: வாய்மொழி திறன் மற்றும் வாசிப்பு புரிதல்
பிரிவு II: தரவு விளக்கம் மற்றும் தருக்க பகுத்தறிவு
பிரிவு III: அளவு திறன்

ஒவ்வொரு பிரிவிலும் கேள்விகளுக்கு பதிலளிக்க சரியாக 40 நிமிடங்கள் ஒதுக்கப்படும் மேலும் ஒரு பிரிவில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர்கள் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!