இஸ்ரோ வழங்கும் தொழில்நுட்ப பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
இஸ்ரோ வழங்கும் தொழில்நுட்ப பயிற்சி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இஸ்ரோ வழங்கும் தொழில்நுட்ப பயிற்சி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இஸ்ரோ வழங்கும் தொழில்நுட்ப பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தொழில்நுட்பம் குறித்த இணையவழி பயிற்சிகளை இஸ்ரோ வழங்கி வருகிறது. இதற்கு ஆர்வமுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 12 நாட்கள் வழங்கப்படும் பயிற்சி குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இஸ்ரோ:

மாணவர்களிடையே புதுமையான படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து தொழில்நுட்பம் குறித்த இணையவழி பயிற்சியை இஸ்ரோ வழங்கி வருகிறது. புவியியல் தகவல் தொழில்நுட்பம் குறித்த கல்விசார் மற்றும் ஆய்வு பணிகளை இந்திய தொலையுணர்வு கல்வி நிறுவனம் (ஐஐஆர்எஸ்) செய்து வருகிறது. இந்த நிறுவனம் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நீட் நுழைவுச் சீட்டுக்கு முன்னரே தேர்வு மையங்கள் வெளியீடு – NTA அறிவிப்பு!

இந்த மையம் மூலம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜிபிஎஸ், நாவிக் போன்ற சர்வதேச செயற்கைக்கோள் வழிகாட்டுதல் தொழில்நுட்பம் தொடர்பான இணையவழியில் இலவச பயிற்சியை ஐஆர்எஸ் வழங்கவுள்ளது. இது போன்ற நுட்பங்களையும் துல்லியமாக கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ கூறியுள்ளது. ஆர்வமுள்ளவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை: ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்வு – இன்றைய விலை நிலவரம்!

இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 13 முதல் 24ம் தேதி வரை நடைபெறும். மேலும் இந்த பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வழிமுறைகள் மற்றும் போதிய விவரங்கள் அனைத்தும் https://www.iirs.gov.in/EDUSAT-News என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களை அதில் தெரிந்து கொள்ளலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!