TCS iON தேசிய தகுதித் தேர்வு – டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS iON தேசிய தகுதித் தேர்வு - டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS iON தேசிய தகுதித் தேர்வு - டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS iON தேசிய தகுதித் தேர்வு – டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

TCS நடத்தும் தேசிய தகுதித் தேர்வுக்கான (NQT) பதிவு செயல்முறை இப்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வு விண்ணப்பம்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் அதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை தற்போது துவங்கி இருக்கிறது. அந்த வகையில் TCS iON என்ற தலைப்பின் கீழ் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு செயல்முறையை தேசிய தகுதித் தேர்வின் மூலம் மேற்கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் TCS தவிர மற்ற நிறுவனங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TNEB AE -ECE தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

இப்போது TCS நிறுவனம் ஒவ்வொரு காலாண்டிலும் இந்த தேசிய தகுதித் தேர்வை (NQT) நடத்துகிறது. இந்த தேர்வில் கலந்து கொண்டு விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மூலம் TCS நிறுவனத்தின் எவ்விதமான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

NQT தேர்வு:

  • NQT தேர்வில் முதன்மையானது அறிவாற்றல் திறன்.
  • அனைத்து NQT மதிப்பெண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
  • TCS iON அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களில் இல்லாமல் இந்த முறை ஆன்லைன் முறையில் நடத்தப்பட இருக்கிறது.
  • ஒவ்வொரு காலாண்டிலும் NQT ஸ்கோரை மேம்படுத்த பல முயற்சிகளில் தோன்றுவதற்கான வாய்ப்பை TCS வழங்குகிறது.
  • NQT தேர்வில் மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் TCS iON ஜாப் லிஸ்டிங் போர்ட்டலில் வேலைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: டிசம்பர் 15.
  • தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 25.
  • TCS தேசிய தகுதித் தேர்வு (TCS NQT) பின்வரும் திறன்களை மதிப்பிடு செய்கிறது:
  • நுழைவு நிலை வேலைகளுக்குத் தேவையான முக்கிய அறிவாற்றல் செயல்முறைகளில் திறன்
  • தொழில் சார்ந்த அறிவு மற்றும் நுண்ணறிவு
  • பல்வேறு பணிகளை செய்வதற்கு தேவையான திறன்கள்.

தகுதி:

  • இத்தேர்வில் UG, PG மற்றும் டிப்ளமோ படித்துள்ள மாணவர்கள் தங்கள் இறுதியாண்டுக்கு முந்தைய ஆண்டில் அல்லது இறுதியாண்டு படிக்கும் போது, படித்து முடித்தவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
  • எந்தவொரு பட்டப்படிப்பும் இதில் கலந்து கொள்வதற்கு தகுதியாகும்.
  • 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவம் உள்ள புதியவர்களும் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
  • பயிற்சி சோதனை:
  • 4 பயிற்சி சோதனைகள் இத்தேர்வில் மேற்கொள்ளப்படும்.
  • இதில் அறிவாற்றல் திறன்களுக்கான 2 சோதனைகளும், IT நிரலாக்கத்திற்கான 2 சோதனைகளும் ஒவ்வொன்றும் 5 முயற்சிகளுடன் அனுமதிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!