தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு – மருத்துவக்கல்வி இயக்ககம்!

0
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - மருத்துவக்கல்வி இயக்ககம்!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - மருத்துவக்கல்வி இயக்ககம்!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு – மருத்துவக்கல்வி இயக்ககம்!

தமிழகத்தில் 2022 – 2023 ம் ஆண்டுக்கான பி.பார்ம், பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்பு:

இந்தியாவில் கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்தாண்டு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு நீட் தேர்வுக்கு ஏறக்குறைய 95% மாணவர்கள் வருகை புரிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டு தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தாண்டு NCERT பாடத்திட்டத்தை நன்றாக படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழகம் முற்றிலும் நீட் தேர்வை எதிர்த்தது. ஆனால் மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுத்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 1.42 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

PM-KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – eKYC கான காலக்கெடு நிறைவு

அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மருத்துவ துணை படிப்புகளான பி.பார்ம், பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங், செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ், ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 17 வகையான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பபதிவுகள் தொடங்கி உள்ளது. இப்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!