அண்ணா பல்கலையில் DDE மூலம் MBA..,MCA படிப்புகளுக்கு விண்ணப்பம் – ஆன்லைனில் துவக்கம்!

0
அண்ணா பல்கலையில் DDE மூலம் MBA..,MCA படிப்புகளுக்கு விண்ணப்பம் - ஆன்லைனில் துவக்கம்!
அண்ணா பல்கலையில் DDE மூலம் MBA..,MCA படிப்புகளுக்கு விண்ணப்பம் - ஆன்லைனில் துவக்கம்!
அண்ணா பல்கலையில் DDE மூலம் MBA..,MCA படிப்புகளுக்கு விண்ணப்பம் – ஆன்லைனில் துவக்கம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி (DDE) மூலம் MBA, MCA மற்றும் MSc உள்ளிட்ட படிப்புகளை மேற்கொள்ள புதிய மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு உகந்த கல்வி நிறுவனமான திகழும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான படிப்புகள் தொலைதூரக் கல்வி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது துவங்கியிருக்கும் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது டான்செட் நுழைவுத் தேர்வு அல்லது தொலைதூரக் கல்விக்கான நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுவது வழக்கம்.

தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை – தேர்வு துறை வெளியீடு!!

இந்நிலையில் இப்படிப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை பணிகள் ஆன்லைனில் துவங்கியுள்ளதாக அண்ணா பல்கலை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘அண்ணா பல்கலையில் தொலைதூர கல்வி முறையில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி படிப்புகளுக்கான புத்திய மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வுக்கு விண்ணப்பம் துவங்கியுள்ளது. இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்கள் https://cdefee.annauniv.edu/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்த படிவங்களை எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு நவம்பர் 31 ஆம் தேதிக்குள்ளும், எம்எஸ்சி படிப்புகளுக்கு டிசம்பர் 3 ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுவரை நடைபெற்ற நுழைவுத்தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பமும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இம்மாணவர்களுக்கான கலந்தாய்வு டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர அண்ணா பல்கலையில் தொலைதூர கல்வி மூலம் பயிலும் மாணவர்கள், நவம்பர் முதல் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு, வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை 044–22357225 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!