செப்.24 முதல் Apple iPhone 13 சீரிஸ் வெளியீடு? விரைவில் முன்பதிவு துவக்கம்!
உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள், தனது சமீபத்திய ஐபோன் 13 சீரிஸை அடுத்த மாதம் 24 ஆம் தேதி வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனுடன் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன்
ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் மகுடம் சூடா மன்னனாக திகழும் பிரபல மென்பொருள் தயாரிப்பு தளமான ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் சீரிஸை வெளியிட இருக்கிறது. வழக்கமாக மற்ற ஸ்மார்ட் போன்களை விட சற்று விலை அதிகம் கொண்ட இந்த ஐபோன்கள் அதன் விலைக்கேற்றபடி தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பல வித்தியாசமான மாடல்களில் புதிய ஐபோன்களை தயாரித்து அவற்றை சந்தைப்படுத்தி வருகிறது.
IND vs ENG 3வது டெஸ்ட் – 432 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்! இந்திய பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்!
அந்த வரிசையில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் ஐபோன் வகையில் நான்கு ஸ்மார்ட்போன்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி உள்ளிட்ட 4 விதங்களில் ஆப்பிள் ஐபோன்கள் வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அதன் முன்பதிவை தொடங்கும் எனவும் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அதன் விற்பனை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்கள் கூறும் தகவல் உண்மையாக இருந்தால், ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் மாதத்துக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த வெளியீடு அநேகமாக செப்டம்பர் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அறிவித்த அட்டவணையின் படி புதிய ஐபோன்களை வெளியிடாத ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 12 சீரிஸை வெளியிடுவதில் ஒரு மாதம் தாமதப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் புதுப்பிக்கப்பட்ட ஃபேஸ் ID உடன் வரும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை முகக்கவசம் அல்லது கண்ணாடி அணிந்திருக்கும் போதும் திறக்க அனுமதிக்கும். ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ், வெண்ணிலா ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 வரிசையை போன்றது என்ற பொய்யான தகவல்கள் பரவியது. மேலும் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்கள் பின்புறத்தில் இரட்டை கேமராக்களைக் கொண்டிருப்பதாகவும், ப்ரோ மாடல்களில் மூன்று கேமராக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்புடன் வரும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.