Apple iPhone 12 மாடல்களுக்கு அதிரடி விலை தள்ளுபடி – ஐபோன் 13 வரவு எதிரொலி!

0
Apple iPhone 12 மாடல்களுக்கு அதிரடி விலை தள்ளுபடி - ஐபோன் 13 வரவு எதிரொலி!
Apple iPhone 12 மாடல்களுக்கு அதிரடி விலை தள்ளுபடி - ஐபோன் 13 வரவு எதிரொலி!
Apple iPhone 12 மாடல்களுக்கு அதிரடி விலை தள்ளுபடி – ஐபோன் 13 வரவு எதிரொலி!

பலரின் கனவு மொபைல் போனாக கருதப்படும் Apple ஐபோன்களுக்கு தற்போது இ காமெர்ஸ் நிறுவனமாக பிளிப்கார்ட் நிறுவனம் பல அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. Apple ஐபோன் கூடிய விரைவில் புதிய மாடல் போன் ஒன்றினை அறிமுகப்படுத்த இருப்பதால் இந்த தள்ளுபடி என்று நம்பப்படுகிறது.

Apple ஐபோன்

இன்றைய காலகட்டத்தில் அனைவர் கையிலும் கண்டிப்பாக ஒரு மொபைல் இருந்து விடுகிறது. மொபைல் இல்லாத நபர்களை காண்பது அரிது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் பலரின் கனவு மொபைல் என்றால் அது Apple ஐபோன் தான். அதன் சிறப்பம்சம் என்னவென்றால் எவராலும் நமது மொபைலை ஹக் செய்ய முடியாது. இதன் காரணமாக இந்த மொபைலுக்கு என்று தனி மவுஸ் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐபோன் 12 மாடல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

அரசு போட்டித் தேர்வுகளில் ‘தமிழ் மொழி’ கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!

இந்த ஐபோன் 12 மாடல் பல அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் Apple ஐபோன் 124 ஜிபி மாடல் 79,900 ரூபாய்க்கும் 256 ஜிபி மாடல் 97,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த போன்களில் சிறப்பு அம்சங்களாக 6.1 இன்ச் OLED டிஸ்பிளே, 4K வீடியோ சப்போர்ட், பின்பக்கம் 12 மெகாபிக்ஸல் கொண்ட இரண்டு கேமராக்கள், 12 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, டைப் போர்ட் சி சப்போர்ட், வொயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் போன்ற அம்சங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை – நீட் தேர்வு மசோதா தாக்கல்!

ஆனால், தற்போது அடுத்த மாடலாக ஐபோன் 13 அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான அறிவிப்புகளும் வெளி வந்த வண்ணம் இருந்து வருகிறது. தற்போது இந்த போன் மாடல்களுக்கு இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தள்ளுபடி வழங்கியுள்ளது. தள்ளுபடி விலையாக 66,000 மற்றும் 71,999 ஆகிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக நம்பப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!