தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய செயலி – முதல்வர் உத்தரவு!

0
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய செயலி - முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய செயலி - முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய செயலி – முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் மின் கணக்கீட்டார்கள் செல்லிடப்பேசி மூலமாக மின் கணக்கீடு எடுத்த உடன் அந்த கட்டணத்தை தெரிந்து கொண்டு உடனே கட்டணம் செலுத்த செயலி அறிமுகப்படுத்த வேண்டும் என முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்கட்டண செயலி:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக மின்வாரிய ஊழியர்கள் மின் கணக்கீடு மேற்கொள்ள வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின்கட்டண அளவை கணக்கீடு செய்து அதனை மின்வாரிய ஊழியர்களுக்கு அனுப்பி அதன் மூலம் கட்டண அளவை தெரிந்து கொண்டு மின் கட்டணத்தை செலுத்தினர். இதனால் மின் கட்டணம் செலுத்துவதில் பல குளறுபடிகள் ஏற்பட்டது.

LPG கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் ரூ.900 வரை கேஷ்பேக் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மேலும் மின் கணக்கீடு செய்ய முடியாத மக்கள் 3 மாத மின்சார பயன்பாட்டை சேர்த்து செலுத்தினர். இதனால் கட்டண அளவு அதிகமாக இருந்தது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த தொகை அதிக சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மின்சார வாரியத்தின் எரிசக்தித் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் கூறுகையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.

ஜூலை 26 முதல் 9, 10 & 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மின்சார உற்பத்திக்கான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து முடித்து செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படாத இணை மின் உற்பத்தி திட்டங்களையும் விரைந்து முடிக்க வேண்டும். மின் உற்பத்திக்கு தேவைப்படும் நிலக்கரியை கையாளுவதில் ஏற்படும் போக்குவரத்து செலவினங்களை குறைக்க வேண்டும். கடந்த 2 மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக ரூ.1,593 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

Can Fin Homes நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!

புதிய வசதியாக மின் நுகா்வோா்களுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்த நுகா்வோா்கள் அவா்களுடைய மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை தாங்களே தங்கள் செல்லிடப்பேசி மூலம் அறிந்து கொள்ள வழி செய்திட வேண்டும். செல்லிடப்பேசி மூலம் மின் கணக்கீடு எடுத்தவுடன் அந்த கட்டணத்தை அறிந்து கொண்டு உடனடியாக அதனை செலுத்த புதிய செயலியை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும் மின்சாரம் தொடர்பான குறைகளை உடனே சரி செய்ய, அவ்வப்போது ஏற்படும் குறைந்த மின் அழுத்த குறைபாடுகளை சரி செய்ய திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!