TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? புதிய பாடத்திட்டம் வெளியீடு!

0
TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? புதிய பாடத்திட்டம் வெளியீடு!
TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? புதிய பாடத்திட்டம் வெளியீடு!
TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? புதிய பாடத்திட்டம் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது இத்தேர்வுக்குரிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. மேலும் தற்போது ஆசிரியர் பணியிடத்தில் 15000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் முதற்கட்டமாக 9000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள். இத்தேர்வில் முதல் தாள் , இரண்டாம் தாள் என இரு வகையில் நடத்தப்படுகிறது. முதல் தாள் விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் 50% மதிப்பெண் தேர்ச்சி பெற்றதுடன் டிப்ளமோவில் ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் இரண்டாம் தாள் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Kotak வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்…!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் ஜூன் 17ம் தேதியிலும், இரண்டாம் தாள் ஜூன் 28ம் தேதியிலும் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!