2டிஜி மருந்தின் செயல்திறன் – உருமாறிய கொரோனா எதிர்ப்பு!

0
2டிஜி மருந்தின் செயல்திறன் - உருமாறிய கொரோனா எதிர்ப்பு!
2டிஜி மருந்தின் செயல்திறன் - உருமாறிய கொரோனா எதிர்ப்பு!
2டிஜி மருந்தின் செயல்திறன் – உருமாறிய கொரோனா எதிர்ப்பு!

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக கண்டறியப்பட்ட 2 டிஜி என்ற மருந்து உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறது என முதற்கட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2டிஜி மருந்து:

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி அதிகளவு பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்தியாவில் வைரஸ் தொற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீடு முறை – அமைச்சர் விளக்கம்!

இதனை தொடர்ந்து டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ 2டிஜி என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க ஏதுவாக உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 2-டிஜி மருந்து கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடையவும், செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்கவும் உதவிகரமாக இருக்கிறது . இது உடலில் வைரஸ் வளர்ச்சியை தடை செய்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் அன்னத் நாராயண் பட், அபிஷேக் குமார், யோகேஷ் ராய், திவியா வேதகிரி உள்ளிட்டோர் இந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் 2-டிஜி மருந்து குறித்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 2-டிஜி மருந்து உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து ஏற்றது. 2-டிஜி மருந்து அதிக செயல்திறன் மிக்கது என முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!