கொரோனாவை அடுத்து புதிதாக பரவும் ஆந்த்ராக்ஸ் நோய் – எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

0
கொரோனாவை அடுத்து புதிதாக பரவும் ஆந்த்ராக்ஸ் நோய் - எச்சரிக்கும் சுகாதாரத்துறை!
கொரோனாவை அடுத்து புதிதாக பரவும் ஆந்த்ராக்ஸ் நோய் - எச்சரிக்கும் சுகாதாரத்துறை!
கொரோனாவை அடுத்து புதிதாக பரவும் ஆந்த்ராக்ஸ் நோய் – எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

உலக முழுவதும் கொரோனா பரவல் தாக்குதலால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் மாநிலத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் விலங்குகள் கூட்டம் கூட்டமாக இறந்து வருகின்றன. இதையடுத்து தற்போது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களை கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

ஆந்த்ராக்ஸ் நோய்:

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெருந்தொற்று நோய் பரவி வருகிறது. இதனால் பெரும்பாதிப்பு ஏற்பட்டு தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக ஆந்த்ராக்ஸ் நோய் என்னும் நோய் பரவி வருகிறது. மேலும், இந்நோய் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படுகிறது. எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி தீவிர சிகிச்சை பெறுவதிலிருந்து உயிரிழப்பை தடுக்க முடியும். மேலும் இந்நோய் காற்றின் மூலமாக பரவாது. ஆனால் இந்நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளும் பொழுது நோய்ப் பரவல் ஏற்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதாவது நோயுற்ற விலங்குகளை தொடும் போது நம் உடலில் காயங்கள் ஏற்பட்டிருப்பின் அதன் வழியாக ஆந்த்ராக்ஸ் கிருமி ஊடுருவி தொற்று பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோய் பரவாமல் கட்டுப்படுத்த ஆந்த்ராக்ஸ் கண்டறியப்பட்ட பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். தற்போது ஆந்த்ராக்ஸ் நோய் கேரள மாநிலத்தில் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டுப்பன்றிகள் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

TNUSRB வேலைவாய்ப்பு அறிவிப்பு – 3,552 காலிப்பணியிடங்கள்! தகுதி உள்ளிட்ட விவரங்கள் இதோ!

மேலும் இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறையினர் கூறியிருப்பதாவது, கேரள மாநிலத்தில் இறந்துள்ள காட்டுப்பன்றிகளின் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து காட்டுப்பன்றிகளின் சடலங்களை புதைத்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அத்துடன் அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மாநிலத்தில் விலங்குகள் கூட்டமாக இறப்பது கண்டறியப்பட்டால் அப்பகுதியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ஆந்த்ராக்ஸ் நோய் கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here