சீரியலில் களமிறங்கும் மற்றொரு சன் டிவி தொகுப்பாளர்.. அதுவும் இவருடைய சீரியலா? ரசிகர்கள் உற்சாகம்!

0

சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது சின்னத்திரையை கலக்கி வரும் நடிகர் நடிகைகள் பலர் இருக்கும் நிலையில், அவர்கள் வரிசையில் தற்போது தொகுப்பாளர் அஸ்வத் சீரியலில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொகுப்பாளர் டூ நடிகர்:

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து சீரியல்களில் என்ட்ரி கொடுத்த நடிகை நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் இருந்து சீரியலில் நக்ஷத்ரா,பார்வதி , பரீனா, விஜே சங்கீதா என பலர் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். அவர்களின் வரிசையில், தற்போது வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர் அஸ்வத், சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அவர் எந்த சீரியலில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த விவரங்களை பற்றி இப்போது வெளியிடமாட்டேன் என தெரிவித்துள்ளார். தற்போது இரு சீரியல்கள் சன் டிவியில் புதிதாக தொடங்க இருக்கிறது. அதில் ஒரு சீரியலில் அக்னி தினேஷ் ஆகியோரும், மற்றொரு சீரியலில் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானாவும் நடிக்க இருக்கிறார்.

கோபி கட்டிய தாலியை கழட்டி எறிந்த பாக்கியா.. அதிர்ச்சியில் மொத்த குடும்பம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தொகுப்பாளர் அஸ்வத், நடிகை ஷாபனாவின் புது சீரியலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஷபானா நடிக்க இருக்கும் சீரியலில் ஹீரோவாக நடிகர் பவன் களமிறங்க இருக்கிறார். விரைவில் இந்த சீரியல் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!