விரைவில் முடிவுக்கு வரும் மற்றொரு பிரபல சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

0
விரைவில் முடிவுக்கு வரும் மற்றொரு பிரபல சீரியல் - ரசிகர்கள் ஷாக்!
விரைவில் முடிவுக்கு வரும் மற்றொரு பிரபல சீரியல் - ரசிகர்கள் ஷாக்!
விரைவில் முடிவுக்கு வரும் மற்றொரு பிரபல சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

சன் டிவியில் சித்தி 2 சீரியலில் ஜோடியாக நடித்து பிரபலமான நந்தன் ப்ரீத்தி ஜோடி தெலுங்கில் காவ்யாஞ்சலி சீரியலில் ஜோடியாக நடித்து வந்த நிலையில் தற்போது அந்த சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

முடிய போகும் சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த சீரியலில் பல குடும்பக் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் பலர் சீரியலை விரும்பி பார்க்கின்றனர். குடும்பமாக பார்க்கும் அளவிற்கு இந்த காலத்து சீரியல்கள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இருக்கிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அதில் ஒரு சில சீரியல்கள் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்து TRPயில் டாப் வரிசையில் இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் பிரபலமான சீரியல் தான் சித்தி 2. இதன் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டது. இந்நிலையில் சித்தி 2 சீரியல் சில வாரங்களுக்கு முன் முடிந்தது, சீரியலில் ஜோடியாக நடித்த நந்தன் ப்ரீத்தி ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தனர்.

கோபியை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் ராதிகா, பரிதாப நிலையில் பாக்கியா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

ஆனால் சீரியல் முடிந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கு மொழியில் காவ்யாஞ்சலி என்ற சீரியலில் நடித்து வருகின்றனர். அதனால் ரசிகர்கள் அந்த சீரியல் மூலமாக இந்த ஜோடியை பார்த்து ரசித்தனர். ஆனால் தற்போது காவ்யாஞ்சலி சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலின் இறுதிநாள் படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!