கன்னியாகுமரியில் வரும் டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
கன்னியாகுமரியில் வரும் டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கன்னியாகுமரியில் வரும் டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கன்னியாகுமரியில் வரும் டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

நாடு முழுவதும் வரும் டிச.25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிச.25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பண்டிகைகள் ஏதும் கொண்டாடப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட கிருஸ்துவ மத மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி & கண்ணம்மா – வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் அதாவது இந்த வார இறுதி நாளான சனிக்கிழமை டிச.25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை மேலைநாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பரவி வரும் ஓமைக்ரான் தொற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. அவர்களது அச்சத்தை போக்கும் விதமாக தமிழகத்தில் கட்டப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு வலியுறுத்தல்!

அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையான டிச.25ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பண்டிகைக்கு முதல் நாளான டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி டிச.24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜனவரி மாதத்தின் 2ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here