தமிழகத்தில் ஓட்டுனர் License பெறுவதற்கான புதிய வழிமுறை – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் ஓட்டுனர் License பெறுவதற்கான புதிய வழிமுறை - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஓட்டுனர் License பெறுவதற்கான புதிய வழிமுறை - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஓட்டுனர் License பெறுவதற்கான புதிய வழிமுறை – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான நடைமுறையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னென்ன புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம்:

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கான வழிமுறைகளில் சில மாற்றத்தை கொண்டுவர இருப்பதாக அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது, தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், வாகனங்களுக்கு ஆர்சி தகுதி சான்று மற்றும் பர்மிட் போன்ற தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சேவைகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாகவே பெறப்பட்டு வருகிறது.

ஆனால், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு மட்டும் போக்குவரத்து அலுவலகங்களில் நேரடியாக நடத்தப்படுகிறது. அதாவது பொதுமக்கள் எந்த வித அலைச்சலும் இல்லாமல் விரைவில் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வு தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது அனைத்து ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வுகளும் நடத்துவதற்கு முன்பாகவே கணினியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

TCS நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் அறிவிப்பு!

அதாவது வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. மேலும், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் போதே ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வினை எந்த நேரத்தில் எந்த நாளில் வைத்துக் கொள்ளலாம் என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படியான வழிவகை செய்யப்பட இருக்கிறது. மேலும், செவ்வாய், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!