தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் தேதியில் மாற்றம் – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் தேதியில் மாற்றம் - அறிவிப்பு வெளியீடு!
தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் தேதியில் மாற்றம் - அறிவிப்பு வெளியீடு!
தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் தேதியில் மாற்றம் – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அமைச்சரவை கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

தமிழக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக அவ்வப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படுகிறது. அதாவது, இந்த கூட்டத்தில் மக்களின் பிரச்சனைகள், புதிய திட்டத்திற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சில குறிப்பிட்ட காரணங்களால் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற இருந்த அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் குறித்து பேசவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, திமுக கட்சி தேர்தலின் போது வாக்குறுதியளித்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும், பழி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது, மின்கட்டணம் உயர்வு தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு பணியாளர் ஆக சூப்பர் வாய்ப்பு – ஆன்லைனில் மாதிரி தேர்வு!

இது மட்டுமல்லாமல் பால் விலை விலையேற்றம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம் குறித்தும், புதிய தொழிற்கொள்கை மற்றும் கல்விக்கொள்கை குறித்த விவகாரங்கள் குறித்தும், தமிழத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் சில முக்கிய அறிவுறுத்தல்களும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here