SBI வங்கி ATMல் பணம் எடுக்க “இது” கட்டாயம்!

0
SBI வங்கி ATMல் பணம் எடுக்க
SBI வங்கி ATMல் பணம் எடுக்க "இது" கட்டாயம்!
SBI வங்கி ATMல் பணம் எடுக்க “இது” கட்டாயம்!

மோசடிகளை தடுக்க SBI வங்கி ATM ல் பணம் எடுக்கும்போது OTP அனுப்பப்படுகிறது. அதை சரியாக உள்ளீடு செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் பணம் பெற்றுக்கொள்ள முடியும்.

SBI ATM:

முந்தைய காலத்தில் அதிகப்படியான பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் இருந்து வந்தது. அதை குறைத்து வாடிக்கையாளர்களின் சிரமத்தினை குறைக்கவும் ஏ டி எம் அமைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பணம் பெறவும் வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகை அறிந்து கொள்வதற்கு உதவுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இயங்கி வருவது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.

நவம்பர் 7ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி – கொரோனா தீவிரம் எதிரொலி!

இந்த வங்கியானது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தனது சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது ATM மூலம் பணம் எடுக்கும் முறையில் பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மோசடி குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து SBI வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு – ரூ.3,000 மற்றும் ரூ.1,000! முதல்வர் சூப்பர் உத்தரவு!

அதில், SBI ATM களில் பணபரிவர்தனை களுக்கு OTP அடிப்படையிலான பணம் திரும்ப பெரும் முறையானது மோசடி செய்பவர்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதே எண்களின் முதன்மை முன்னுரிமையாக உள்ளது என கூறியுள்ளது. ATM களில் பணம் பெறும் போது வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். சரியான OTP எண்ணை டைப் செய்தல் மட்டுமே பணம் பெற முடியும் என்னும் அம்சத்தை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் வேறு வங்கியில் பணம் எடுக்கும் போது இந்த வசதி இதில் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!