மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – SBI வங்கி வழங்கும் சூப்பர் வசதி!

0
மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - SBI வங்கி வழங்கும் சூப்பர் வசதி!
மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - SBI வங்கி வழங்கும் சூப்பர் வசதி!
மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – SBI வங்கி வழங்கும் சூப்பர் வசதி!

ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் வாழ்க்கை சான்றிதழைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தங்கள் வாடிக்கையாளர்கள் வீடியோ கால் மூலம் தங்கள் சான்றிதழை பெற்றுக் கொள்ளும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜீவன் பிரமான் பத்ரா:

ஜீவன் பிரமான் பத்ரா என்றும் அழைக்கப்படும் வாழ்க்கைச் சான்றிதழ்கள் ஓய்வூதியம் பெறுபவர்களின் இருப்பை உறுதி செய்யும் முக்கியமான ஆவணமாகும். குறிப்பிட்ட நபர்கள் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாக இந்த ஆவணம் செயல்படுகிறது. அரசு ஓய்வூதியம் பெறுவோர், தங்களுடைய ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவை மாணவி தற்கொலை – இயற்பியல் ஆசிரியரை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் மீதும் போக்சோ!

ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய வாழ்க்கைச் சான்றிதழை பெற பாரத ஸ்டேட் வங்கி (SBI) எளிதான ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, எஸ்பிஐ வீடியோ லைஃப் சான்றிதழ் (விஎல்சி) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஓய்வூதியம் பெறுவோர் எஸ்பிஐ ஊழியர்களுடன் மொபைல் அல்லது கணினி சாதனங்களில் வீடியோ கால் அழைப்பை திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிகலாம். இதற்காக வயதான அவர்கள் வங்கிக்கு நேரடையாக செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஸ்பிஐ வீடியோ லைஃப் சான்றிதழ் பெறும் முறை:
  • வீடியோ கால் அழைப்பை பயன்படுத்தி வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க, எஸ்பிஐயில் ஓய்வூதியக் கணக்கு வைத்திருக்கும் ஓய்வூதியதாரர்கள் www.pensionseva.sbi என்ற இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
  • ஓய்வூதியம் பெறுவோர் மொபைல் போன்கள், முன் கேமராக்கள் கொண்ட டேப்லெட் சாதனங்கள் மற்றும் வெப் கேமராக்கள் கொண்ட மடிக்கணினிகள் மற்றும் பிசிக்கள் போன்ற முன்புறம் கேமரா கொண்ட சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும்.
  • இணையதளத்தில், பயனர்கள் வீடியோ LC ஐத் தேர்ந்தெடுத்து, பின்னர் அவர்களின் SBI ஓய்வூதிய கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும்.
  • எஸ்பிஐ ஓய்வூதியக் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் மொபைல் எண்களுக்கு OTP வரும். கொடுக்கப்பட்டுள்ள இடத்தில OTP ஐச் சமர்ப்பித்த பிறகு, பயனர்கள் மேலும் தொடர முடியும்.

சென்னை: 37 ஆயிரம் ரூபாயை கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!

  • விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்துவிட்டு, ‘Start Journey’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இணைய உலாவியானது கேமராவிலிருந்து வீடியோவைப் படமெடுப்பதற்கான அனுமதியை கேட்கும். அதை பயனர்கள் அனுமதிக்க வேண்டும்.
  • ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் பான் கார்டை தயார் நிலையில் வைத்து, ‘I Am Ready’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள SBI பணியாளர்கள், திரையில் தெரியும் 4 இலக்க குறியீட்டை சத்தமாக வாசிக்கும்படி பயனர்களை கேட்பார்கள்.
  • பயனர்களின் பான் கார்டை கேமராவில் காண்பிக்கும்படி கேட்பார்கள். இதன் மூலம் ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் படம் எடுக்கப்படும்.
  • ஒரு வேளை, VLC நிராகரிக்கப்பட்டால், ஓய்வூதியதாரருக்கு அதைத் தெரிவிக்கும் வகையில் வங்கி SMS அனுப்பி தெரிவிக்கும் என்று வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!