Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அஞ்சல் நிலையத்தில் மக்கள் சேமிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவரும் எளிய முறையில் சேமிக்க RD மிகவும் பொருத்தமானதாக கருதப்படுகிறது.

RD கணக்கு:

அஞ்சலகத்தில் நாம் சேமிப்பு கணக்கு தொடங்குவது மிகவும் எளிமையான வழிமுறையாக உள்ளது. ஆனால் அதன் மூலம் அதிக அளவிலான நன்மைகளை பெறலாம். இதற்காக பல்வேறு திட்டங்களை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. சேமிக்க விரும்பும் மக்கள் தனியார் துறை சேமிப்பு நிறுவனங்களை நம்பி ஏமாந்து போகாமல், அரசின் அஞ்சல் துறையில் சேமிப்பது மிகவும் பாதுகாப்பானது ஆனது. ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்கள் தான் அதிக அளவில் பிரபலமாக உள்ளது. மொத்தமாக பணத்தை சேமிக்க விரும்புபவர்கள் நிலையான வைத்து தொகை திட்டத்தில் சேரலாம்.

அரசு நிறுவனங்களில் 95% வேலைகள் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அப்படி இல்லாமல் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க விரும்பும் மக்கள் RD திட்டத்தில் சேரலாம். ஒவ்வொரு மாதமும் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க இந்த திட்டம் உதவியாக உள்ளது. போஸ்ட் ஆபிசில் சேமிப்பு கணக்கு உள்ளவர்கள் அதில் RD கணக்கை தொடங்கி கொள்ளலாம். மேலும், நெட் பேங்கிங் வசதி மூலம் ஆன்லைனில் RD கணக்கை தொடங்கலாம். இதன் மூலமாகவே மாத மாதம் பணத்தை செலுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் நேரடியாக அஞ்சலகத்திற்கு சென்று படிவத்தினை பூர்த்தி செய்து கணக்கை தொடங்கலாம். தொடர் வைப்பு நிதி திட்டத்தில் வட்டி விகிதம் 5.8% கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், வருடத்திற்கு 4 முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி தொகை கிடைக்கும்.

ஆன்லைன் RD கணக்கு தொடங்கும் முறைகள்:
  • முதலில் https://ebanking.indiapost.gov.in என்ற இணைப்பிற்கு செல்ல வேண்டும்.
  • அதில், உங்களது யூஸர் ஐடி மற்றும் லாகின் பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும்.
  • மெனுவில் இருக்கும் ‘General Service’ என்ற tab-ஐ கிளிக் செய்து, பின் ‘Service request’ tab-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • ‘Service request’ என்பதன் கீழ், ‘New Requests’ என்ற tab-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது ‘RD Accounts- Open an RD Account’ என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் உங்களது அனைத்து விவரங்களையும் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • இப்பொழுது ‘ட்ரான்ஸேக்ஷன் பாஸ்வேர்டை’ உள்ளிட்ட வேண்டும்.
  • அனைத்து செயல்முறைகளை முடிந்த பிறகு RD அக்கவுண்டின் முதிர்வு தேதி மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் டெபாசிட் செய்ய வேண்டிய தொகையின் விவரங்கள் தெரிவிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!