தமிழக பேருந்துகளில் இலவச பயண டோக்கனுக்கான அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
தமிழக பேருந்துகளில் இலவச பயண டோக்கனுக்கான அறிவிப்பு - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழக பேருந்துகளில் இலவச பயண டோக்கனுக்கான அறிவிப்பு - பொதுமக்கள் கவனத்திற்கு!தமிழக பேருந்துகளில் இலவச பயண டோக்கனுக்கான அறிவிப்பு - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழக பேருந்துகளில் இலவச பயண டோக்கனுக்கான அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்களை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வருகிற 21ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

பயண டோக்கன்

தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கென்று பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சென்னை போன்ற மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கென்று கட்டணமில்லாமல் பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 6 மாத தொடக்கத்திலும் இந்த கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த மாதம் வரை மூத்த குடிமக்கள் இந்த இலவச டோக்கன் மூலமாக பயணம் செய்ய முடியும்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற விரும்பும் நபர்கள், இருப்பிட சான்று, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணத்தின் நகல் மற்றும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு நகல் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் 2 வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பழைய அட்டையை புதுப்பிக்க பழைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

ESIC மருத்துவ கல்லூரியில் ஆசிரியர் வேலை – தேர்வு இல்லை || 490+ காலியிடங்கள்..!

இதனை தொடர்ந்து அடுத்த 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில் வழங்கப்பட உள்ளது. இவை வருகிற 21ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்பட உள்ளது. அத்துடன் இதனை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை பேருந்து நிலையம், மத்திய பணிமனை, சென்ட்ரல் பேருந்து நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட மையங்களில் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!